சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி கவிதா, உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் முத்துக்குமார் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கவிதா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.