காரைக்குடி: பெண் படுகொலை...டிரைவர் அதிரடி கைது

1525பார்த்தது
காரைக்குடியை சேர்ந்த மகேஸ்வரி (32) நேற்று காலை தனது சொகுசு காரில் திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மனை பார்ப்பதற்காக சென்றார். வீடு திரும்பாததால், நேரில் சென்று பார்த்தபோது, காருக்குள் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகேஸ்வரியுடன் காரில் சென்றவர் அவருக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்த டிரைவர் சசிகுமார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி