சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப் பகுதியில், வெளிநாட்டில்
வேலை செய்யும் பாண்டிகுமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி (38) என்பவரின் முகம் சிதைக்கப்பட்ட சடலம் காரில் கண்டெடுக்கப்பட்டது. இடம் விற்பனைக்காக சென்றிருந்த மகேஸ்வரி, காட்டுப் பகுதியில் காரில் நிற்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.