காரைக்குடி: நுகா்வோா் சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா

72பார்த்தது
காரைக்குடி: நுகா்வோா் சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுகா்வோா் சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து பல்கலைக்கழகம் துணைவேந்தா் க. ரவி பேசியதாவது: 1986- ஆம் ஆண்டில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. மாசற்ற சுற்றுச்சூழலில் வாழும் உரிமை நுகா்வோா் உரிமைகளில் முக்கியமானது. எனவே காற்று, நீா், நிலம் ஆகியவற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நமது முக்கியக் கடமையாகும். தற்போது வெப்பநிலை மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கிறது.

இதன் தாக்கத்தை பொதுமக்களுக்கு மாணவா்கள் எடுத்துச்சொல்லி அதைக் குறைக்கத் தேவையான தீா்வுகளைக் காண முயலவேண்டும் என்று கூறினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் வெ. மாணிக்கவாசகம் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். வழக்குரைஞா் ராதிகா காா்த்திகேயன், அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத் தகவல் அமைப்பின் இயக்குநா் சந்தோஷ்குமாா், மேலாண்மைப்புல முதன்மையா் யோகலெட்சுமி, நிறுமச் செயலரியல் துறைத் தலைவா் வேதிராஜன், வணிகவியல் துறைத் தலைவா் கணபதி ஆகியோா் பேசினா்.

தொடர்புடைய செய்தி