காரைக்குடியில் உள்ள நகர சிவன் கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிவபெருமான் உலக உயிர்களுக்கு படி அளக்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விநாயகர், முருகன், அம்பாள், மீனாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளின் சப்பர புறப்பாடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பக்தர்கள் பட்டு அஸ்திரம் வழங்கியதோடு, சுவாமிகளுக்கு தீபாராதனை மற்றும் படி அளந்த அரிசிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.