காரைக்குடி: பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

574பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அரசியல் பிரமுகர் ஒருவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த சூரிய பிரகாஷ், வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய 53 வயது பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி தோட்டக்காரர்களின் உதவியால் மீட்கப்பட்ட அப்பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில், சாக்கோட்டை காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சூரிய பிரகாஷை கைது செய்தனர். அவர் அரசியல் பிரமுகரின் தோட்டத்தில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்.

தொடர்புடைய செய்தி