
இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலராங்கியம் பகுதியில் காளீஸ்வரி என்பவரின் கணவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் உறவினரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனது. வெளியூர் சென்று திரும்பியபோது வாகனம் காணாமல் போனதை அறிந்த அவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.























