இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த இளநிலை உதவியாளர் பகவதி ராஜா, வேலைச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் அலுவலகத்திலேயே கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்து இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அறிந்த தாலுகா அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரது நலம் விசாரித்தனர்.