மானாமதுரை: தேர் வெள்ளோட்ட விழாவில் விபத்து

906பார்த்தது
மானாமதுரை அருகே சோமநாதர் ஆனந்தவல்லி திருக்கோயிலில் நடைபெற்ற புதிய தேர் வெள்ளோட்ட விழாவின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி சந்திரசேகர் (36) என்பவர் தேரின் சக்கரத்தில் விழுந்து இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தேரோட்டத்தின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், பாதுகாப்பு கயிறுகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி