சிவகங்கை மாவட்டம்
சிப்காட் பகுதியில் செயல்படும் கடற்பாசி நிறுவனத்திடமிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்தது. எனினும், அந்த நிறுவனம், எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறாமல், தனியார் இடத்தில் கழிவுகளை எரித்தது. இதன் விளைவாக, பக்கத்திலுள்ள கிராமங்களில் புகை பரவி, கடும் துர்நாற்றத்துடன் மக்கள் மூச்சு விட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் கிராம மக்கள் வருவாய்த் துறையிடம் புகார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து, மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அந்த இடத்தில் செயல்பட்டு வந்த மறுசுழற்சி ஆலையை உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கழிவுகளை பாதுகாப்பின்றி எரித்ததால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதை உணராமல், அதை குத்தகைக்கு எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.