சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மணலூர் பகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில், “2026-ல் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டில் அமர்ந்தே தீரும்” என்ற வாசகமும், 2026-ஆம் ஆண்டு தமிழக ஆளுநர், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. 2026-ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அது மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.