சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் நகையை எடுக்கவில்லை என நீதிபதி மூலம் தெரிய வந்துள்ளது. இது ஒரு பொய் வழக்கு என உறுதியானதால், உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் குமார், பொய் புகார் அளித்த நிகிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார்.