தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 21.8.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. மேலும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 22.8.2025 அன்று இதே பிரிவினருக்கு பேச்சுப் போட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.