2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற போலீசாருக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ். பி. ) சிவபிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் காலங்களில் பாதுகாப்பு பணிக்காக ஓய்வு பெற்ற போலீசாரை நியமிப்பது வழக்கமாகும். இதன்படி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் முத்துச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பணியில் சேர விருப்பமுள்ள ஓய்வு பெற்ற போலீசாரின் பெயர் மற்றும் பிற விவரங்களை பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு எஸ். பி. கேட்டுக்கொண்டுள்ளார்.