சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அரசு அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக சிப்காட் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், இடைக்காட்டூர், அதிகரை மற்றும் வேலூர் பகுதிகளைச் சேர்ந்த சத்தியசெல்வன், தர்மராஜ், அஜித், சிவராஜா, சிங்கமுத்து ஆகிய 5 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.