புதூர் பேருந்து நிலையத்தில் வழிப்பறி சிசிடிவி காட்சி

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் காலை ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தி அவர் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு மூன்று மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இளையான்குடி காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி