கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க கீழடி தொல்லியல் தளத்தினை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில், 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிகூடங்களுடன் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், மகளிர் உரிமை தொகையாக தமிழக முதலமைச்சர் ஐந்து ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தமிழக முழுவதும் கொண்டாடி வருகின்றனர் என தெரிவித்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் மரு. செல்வசுரபி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி