சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். சிறப்பு உணவுப் பொருட்களை தயாரித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.