சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இளங்கலை பட்டம், MS Office சான்றிதழ் அல்லது கணினி பட்டம், 5 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக்குழு அனுபவம், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.