தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர்/பழங்குடியினராகவும், 18-32 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு முதல் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.