மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

0பார்த்தது
ஆந்திர மாநிலத்தைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ. 10000, சாதாரண ஊனமுற்றவர்களுக்கு ரூ. 6000, படுக்கை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 15000 என உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என இச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி