முனைவர் பட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு வரவேற்பு

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம், சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ஆக்ஸ்போ பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். மானாமதுரை ரயில்வே நிலையம் வந்தடைந்த அவரை, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பூர்வீக வைகைப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மலர்த்தொகுப்புகள், மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். தமக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகத்திற்கும், விவசாய அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த மாணிக்கவாசகம், விவசாயிகள் நலன், வைகைப் பாசன வளங்களின் பாதுகாப்பு, கிராமப்புற மக்களின் முன்னேற்றம் போன்ற விசயங்களில் தொடர்ந்து பாடுபடுவதாகத் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you