சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி" சென்று விசில் சின்னத்தை மக்களிடம் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. சின்னத்தை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.அப்பு கண்ணதாசன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.