சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்ற அரசு சேவைகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.