கீழடி அருங்காட்சியகத்தில் ஆங்கிலக் குறும்படம் ஒளிபரப்பு –

3பார்த்தது
உலக பாரம்பரிய வாரத்தைக் (நவம்பர் 19 முதல் 25 வரை) கொண்டாடும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு இன்று ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர். 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் ரூ. 18.41 கோடி செலவில் 11 கட்டிடத் தொகுதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, வழக்கமாக தமிழில் ஒளிபரப்பப்படும் கீழடி ஆய்வுகள் குறித்த குறும்படம், முதன்முறையாக ஆங்கிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

தொடர்புடைய செய்தி