சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்தில் இன்று விவசாயி முனியசாமி (48) வயலில் நெல் நாற்றுகளை தலையில் சுமந்து சென்றபோது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின் கம்பிகளை உயர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.