திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

260பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் சுமார் 24.30 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறுவர்களுக்கு 10 ரூபாய், மாணவர்களுக்கு 5 ரூபாய் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டினருக்கு கட்டணம் அதிகமாகும். புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுக்கும் தனித்தனிக் கட்டணங்கள் உண்டு. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 வரையும், சனி, ஞாயிறுகளில் மாலை 6 மணி வரையும் திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை விடுமுறை.
Job Suitcase

Jobs near you