கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா

0பார்த்தது
கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித்துறையின் சார்பில் அடிக்கல் நாட்டிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பங்கேற்று கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வி தே. ஜெஃபி கிரேசியா, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மானாமதுரை) முதல்வர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி