சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு வந்த பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் தற்போது வைகை ஆற்றில் குவிந்து கிடக்கின்றன. இதனால், வைகை ஆறு முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.