சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தலைமுறையாக மண்பாண்டம் தயாரிக்கும் குலாலர் சமூகத்தினர், இசைக்கருவியான கடம் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர். இக்கலையைப் பாதுகாக்க, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில், ரமேஷ் தலைமையில் 50 பெண்களுக்கு இரண்டு மாதக் கடம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு தினசரி ₹350–₹500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.