சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயித்த ரூ57,700 ஊதியம், 12 மாதங்களுக்கும் முழு ஊதியம், PF/EPF நலன்கள், மகப்பேறு விடுப்பு, மற்றும் ஓய்வு பெறும் விரிவுரையாளர்களுக்கு ₹25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி