முளைப்பாரி திருவிழாவிற்கும் தடையாக தனிநபர் ஆக்கிரமிப்பு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள், தங்கள் பயன்பாட்டில் உள்ள ஊரணிக்குச் செல்லும் கால்வாயை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மழைக்காலங்களில் ஊரணிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்படும் முளைப்பாரி திருவிழாவின்போது ஊரணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊரணிக்கு நீர்வரத்தை உறுதி செய்து, ஊரணியைத் தூர்வாரக் கோரி மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி