இடைக்காட்டூர் ஜல்லிக்கட்டில் 730 காளைகள், 330 வீரர்கள் பங்கேற்பு

388பார்த்தது
இடைக்காட்டூர் ஜல்லிக்கட்டில் 730 காளைகள், 330 வீரர்கள் பங்கேற்பு
இடைக்காட்டூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கே.டி.ஆர். குழுமம் சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 730 காளைகள் மற்றும் 330 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், பலத்த காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி