அடிப்படை வசதியின்றி காலியான கிராமமாக மாறும் கலியநேந்தல்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கலியநேந்தல் கிராமம் குடிநீர், சாலை வசதியின்றி படிப்படியாக காலியாகி வருகிறது. ஒரு காலத்தில் 300 குடும்பங்கள் வசித்த கிராமத்தில் தற்போது 50 வீடுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மாதத்திற்கு ஒருமுறை கிடைக்கும் குறைந்த அளவு குடிநீரால், உப்புத்தன்மை கொண்ட குளத்து நீரை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. கட்டனூர் குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்தும் தண்ணீர் வழங்கப்படவில்லை என மக்கள் ஒப்பந்தக்காரர்களை குற்றம்சாட்டுகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி