காரைக்குடி சி.எம். தெருவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில், நகர சிவன் கோவில் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள நிலையில், அதே பகுதியில் டாஸ்மாக் கடை எண் 7520 செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கண்டித்து, அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி டாஸ்மாக் கடை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.