சிவகங்கை மாவட்டம் வடக்கு காவனூரில் உள்ள பொன்மணி விநாயகர் கோயிலில் இன்று காலை பூர்ணாஹூதி நிறைவடைந்தது. புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசத்திற்கு கொண்டு சென்றனர். வானில் கருடன்கள் வட்டமிட்ட நிலையில், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.