சிவகங்கை அருகே கண்டணியில் இருந்து மானாமதுரை சிப்காட் கிடங்கிற்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பழுதானதால், மூட்டைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பையா (45) என்பவர் மீது நெல் மூடைகள் சரிந்து விழுந்தன. இதில் படுகாயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.