மானாமதுரை அரசு மருத்துவமனையில் நந்தினி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்ததிலிருந்தே குழந்தைக்கு அதிக காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் பலமுறை தெரிவித்தும், முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.