புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.