இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள வளமீட்பு பூங்கா மற்றும் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ இளங்கோவன் இன்று குப்பை கிடங்கு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.