சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மே 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறவுள்ளது. மேலும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.