கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

4பார்த்தது
மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த புகழேந்தி, ராமநாதபுரம் மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தனது குடும்பத்தினருடன் காரில் மானாமதுரை வழியாக ராஜகம்பீரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யசோதா (64) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற 4 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி