சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 77 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 13,897 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், லாரிகள் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் பல மையங்களில் நகர்த்தப்படாமல் தேங்கியுள்ளன. இதனால் புதியதாக விவசாயிகளிடமிருந்து நெல் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெல் போக்குவரத்து தாமதமானால் கிடங்குகளுக்கும் அரிசி ஆலைகளுக்கும் அனுப்பும் செயல்முறை பாதிக்கப்படுவதுடன், மழை உள்ளிட்ட காரணங்களால் நெல் சேதமடையும் அபாயமும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.