விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரி மனு

361பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெறாததால், மானாமதுரை அருகே பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தார். நீர் பஞ்சம், பயிர் சேதம், மின்விநியோக தடைகள், ஆதரவு விலை போன்ற பிரச்சினைகளை தெரிவிக்க குறைதீர் கூட்டம் முக்கிய வாய்ப்பாக இருந்தது. தற்போது வறட்சி நிலவுவதால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். எனவே உடனடியாக குறைதீர் கூட்டத்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி