காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு என ஆட்சியரிடம் மனு

0பார்த்தது
சிவகங்கை அருகே அண்ணாநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்தியின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில நபர்கள் மகளைக் கடத்திச் சென்றதாக புகார் அளிக்க சிவகங்கை நகர் காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் புகார் வாங்க மறுத்து அவதூறாகப் பேசியதாகவும், வீடியோ எடுத்ததாகக் கூறி செல்போனைப் பறித்ததாகவும் ஆனந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி