சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆர். புக்குழி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, தனது வீட்டில் இருந்த ரூ. 12,000 பணமும் ஒரு பவுன் தங்க நகையும் திருடப்பட்டதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மனு பெற்றுக் கொண்டும் காவல்துறை ரசீது கூட வழங்காமல் அலட்சியம் காட்டுவதாகவும், உறவினர் மீது சந்தேகம் தெரிவித்தபோதும் வழக்கு பதிவு செய்யப்படாமலும், விசாரணை தொடங்கப்படாமலும் உள்ளதாகவும் ஈஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.