தேவகோட்டை ரஸ்தா பகுதியில் காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் சரண் என்பவரை கடத்திச் சென்று, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை அவமதிக்கும் வகையில் ஆடைகளைக் களைந்து புகைப்படம் எடுத்து, பின்னர் மேம்பாலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள இருண்ட இடத்தில் விட்டுச் சென்றதாகவும் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.