சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உழவர் சந்தை பஜார் பகுதியில் கடை நடத்தி வரும் காதர் பிச்சை என்பவர், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.1000 மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் முகமது சகுல் ஹக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.