பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

252பார்த்தது
தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்துள்ளது. இதனால் தினசரி வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் இந்த விலை உயர்வின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி