சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட கோச்சடை, T. புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை, பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வெப்பம் தணிந்து, சூழலில் குளிர்ச்சியான நிலை உருவாகியுள்ளது. மேலும், இந்த மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு இம்மழை உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.